திரைச்செய்திகள்

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் ஹீரோயின் ஷெரின், அதே பொலிவோடும் அழகோடும் இருப்பார் என்று நினைப்பதுதானே மனுஷ மனசு?

ஆனால் நிஜம் கொடூரமானது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஷெரீனை பார்த்த திருவாளர் வெகுஜனம், தீயை விழுங்கிய எபெக்ட்டுக்கு ஆளாகிவிட்டது. அவரது முதல் ஹீரோவான தனுஷ் சொன்னது போல, பார்க்க பார்க்க பிடிக்குமோ என்னவோ? இது போக ஷெரின் பற்றிய உபரி தகவல் ஒன்று. சில முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் ஷெரீன். அந்த அனுபவத்தில் ஒரு படத்தை இயக்குகிற மனநிலையில் இருந்தவருக்கு இந்த பிக்பாஸ்3 எந்த வகையில் கை கொடுக்கப் போகுதோ?