திரைச்செய்திகள்

லெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஒருவழியாக ஹீரோவாகிவிட்டார்.

வீட்டிலேயே நடிப்பு பயிற்சி எடுத்துவரும் அவர் சுமார் முப்பது கோடி செலவில் பிரமாண்டமாக இப்படத்தை உருவாக்கப் போகிறாராம். யார் ஹீரோயின்? அங்குதான் அய்யோ குய்யோ. அவருடன் விளம்பரத்தில் சந்தோஷமாக நடித்த ஹன்சிகா, தமன்னா, காஜல் உள்ளிட்ட பலரும் ஓட்டமெடுக்கிறார்களாம். வௌம்பரம் வேற. சினிமா வேற... என்று கூசாமல் மறுக்கும் இவர்களுக்கு ஆத்திரமூட்ட முடிவெடுத்துவிட்டார் அண்ணாச்சி. மும்பை டாப் ஹீரோயின் ஒருவரை பேசிக் கொண்டிருக்கிறார்களாம். ஆமாம்... டைரக்டர் யாரு இந்த படத்துக்கு? அண்ணாச்சியின் விளம்பரப்படங்களை உருவாக்கி வரும் ஜேடி-ஜெர்ரி இரட்டையர்கள்தான்!