திரைச்செய்திகள்
Typography

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் விஸ்வரூப பாய்ச்சலாக சினிமாவுக்குள் வந்த பிரமிட் சாய்மீரா பட நிறுவனம், பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி ரிலீஸ் செய்த வகையிலும் பெரிய நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்த வகையிலும், ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க கிளம்பிய வகையிலும் படுத்த படுக்கையாகிவிட்டது.

அந்த நேரத்தில் கமல்ஹாசனை வைத்து ‘மர்மயோகி’ என்கிற படத்தை தயாரிக்க நினைத்த அந்நிறுவனத் தலைவர் பிரமிட் சாமிநாதன் 12 கோடியை கமலுக்கு அட்வான்சாகவும் கொடுத்திருந்தார். ஆனால் படம் துவங்கப்படவே இல்லை. அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டு நொந்து போன சாமிநாதன் சில தினங்களுக்கு முன் காலமாகிவிட்டார். அந்த குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் 4 கோடியை மட்டுமாவது திருப்பித் தரச்சொல்லி சில தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தலைமையில் ஒன்று கூடியிருக்கிறார்களாம். வந்தா நோட்டு... வரலேன்னா கமலுக்கு பாட்டு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்