திரைச்செய்திகள்

அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வியாபாரம், அப்படியே மூட்டையில் கட்டப்பட்ட முட்டைக் கோஸ் போல நகராமல் கிடக்கிறது.

இந்த நிலையில் அப்படம் வெளிவருவதாக சொல்லப்பட்ட ஆகஸ்ட் முதல் வாரத்தில் தனது ‘கடாரம் கொண்டான்’ படத்தை கொண்டுவர முடிவெடுத்திருக்கிறாராம் விக்ரம். பதறிப்போன விநியோகஸ்தர்கள், “ஆகஸ்ட் 1 ந் தேதியே வந்திருங்க. 8 ந்தேதி ‘கடாரம் கொண்டான்’ ரிலீசை வச்சுக்குறோம்” என்கிறார்களாம் நே.கொ.பா தயாரிப்பாளர் போனிக்கபூரிடம். தமிழில் என்ட்ரி ஆன நாளிலிருந்தே விநியோகஸ்தர்களின் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்காத போனிக்கபூர், இந்த முறையும் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாராம். பூசாரி வச்ச புளிக் குழம்புல விபூதி வாசம்தானே அடிக்கும்? தமிழர்களை அலட்சியப்படுத்துவதில் இந்திக்காரங்கதான் டாப்!