திரைச்செய்திகள்
Typography

எப்போது மார்க்கெட்டில் தனி ஸ்டாராக தலை நிமிர்ந்தாரோ... அப்பவே பிரமோஷன்களுக்கு வருவதை நிறுத்திவிட்டார் நயன்தாரா.

அதற்கப்புறம் அவர் தன் பட பிரமோஷனுக்கு கலந்து கொண்ட ஒரே படம் ‘அறம்’. அப்படம் மக்கள் மத்தியில் விதைத்த இமேஜ்தான் நயன்தாராவை இறங்கி வர வைத்தது. அப்படியெல்லாம் பெயரையும் புகழையும் தந்த ‘அறம்’ படத்தின் பார்ட் 2 ல் அவர் நடிக்க வேண்டுமல்லவா? அதைதான் தள்ளி தள்ளி போடுகிறாராம். அறம் 2 க்காக காத்திருந்த அப்படத்தின் இயக்குனர் கோபிநயினார் திடீரென சமந்தாவை சந்தித்து ஒரு கதை சொல்ல... ‘யெஸ் புரசீட்’ என்று கூறிவிட்டார் சமந்தா. ஆனால் இந்தப்படத்திற்கும் அறம் 2 க்கும் துளியும் தொடர்பில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்