திரைச்செய்திகள்

விஜய்யின் ‘பிகில்’ படத்தை ஸ்கிரின் சீன் என்ற நிறுவனம் சுமார் 70 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது.

சர்காரை விட அதிக விலைதான். கொத்திக் கொண்டு போவார்கள் என்று விநியோகஸ்தர்களுக்காக காத்திருந்தால், கரண்ட் இல்லாத காலிங் பெல் போல அமைதியாகவே இருக்கிறதாம் நிலவரம். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அடித்துப் பிடித்துக் கொண்டு ஆபிஸ் நோக்கி வருவார்கள் என்ற நம்பிக்கையிலிருக்கிறது ஸ்கிரின் சீன்! இதற்கிடையில் தன் போர்ஷனை முடித்துக் கொடுத்த விஜய் க்ளைமாக்சில் படமாக்க வேண்டிய ஒரு சில காட்சிகளுக்காக காத்திருக்கிறாராம். டெல்லியில் ஷுட்டிங். ஆனால் பர்மிஷன் வாங்குவதற்குள் மூச்சு இரைக்கிறதாம் கம்பெனிக்கு. ஏன்? தலைநகரத்தில் வைத்து மத்திய அரசுக்கு எதிரா முழங்கிட்டார்னா?