திரைச்செய்திகள்
Typography

படம் ரிலீசான முதல் ஷோவே அப்படத்தின் விமர்சனத்தை யு ட்யூபில் வெளியிட்டு சம்பந்தப்பட்ட படங்களுக்கு சங்கு ஊதிவிடும் விமர்சகர்களிடம், “ரெண்டு நாள் கழிச்சு அந்த விமர்சனத்தை போடுங்களேன்” என்று கேட்டுக் கொள்வதற்காக தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்தது.

விடுத்தவர், விரைவில் அந்த சங்கத்தில் தலைவர் பொறுப்புக்கு ஆசைப்பட்டு போட்டியிடவிருக்கும் சதீஷ்குமார் என்கிற ஜே.எஸ்.கே. ஓட்டு வாங்குவதற்காக இப்படியெல்லாம் சீன் போடும் இவரது  அரிப்பை புரிந்து கொண்ட பலரும் எஸ்கேப். “முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அழைச்சா போகலாம். கண்டவங்க அழைப்பையெல்லாம் கண்டுக்கணுமா?” என்கிறார்கள் யு ட்யூப் விமர்சகர்கள். ஆக... இந்த சந்திப்பு திட்டமே பிளாப்!

BLOG COMMENTS POWERED BY DISQUS