திரைச்செய்திகள்
Typography

என்னோட யாரு ஜோடி சேர்ந்தாலும், அவங்க இன்னொரு முறை சேராம விட மாட்டாங்க.

இப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க தகவலை சொல்லி தன் முன் பல்லை கஷ்டப்பட்டு மூடிக் கொண்டார் சசிகுமார். லட்சுமிமேனன், சுப்ரமணியபுரம் ஸ்வாதியை தொடர்ந்து இப்போது நிகிலா வர்மாவாம். யாரிந்த நிகிலா? சசிகுமாரின் முந்தைய படமான வெற்றிவேல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். இப்போது சசிகுமார் நடித்துக் கொண்டிருக்கும் கிடாரி படத்திற்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த போதுதான், சசிகுமாருக்கு தன் சென்ட்டிமென்ட் நினைவுக்கு வந்ததாம். ஏன் நிகிலாவையே ட்ரை பண்ணக் கூடாது என்று கேட்க, ஹீரோவே கேட்டுவிட்ட பிறகு வேணாம்னு சொல்ல டைரக்டர் என்ன அப்பாவியா? தேடிப்பிடித்து கூட்டி வந்துவிட்டார். நிகிலாவோ, “நான் திரும்ப திரும்ப சசிகுமார் படத்தில் நடிச்சுகிட்டேயிருக்கணும்” என்கிறார். கிடாரி வந்தால்தான் தெரியும்... ரிப்பீட்டா, அப்பீட்டா என்பது? 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்