திரைச்செய்திகள்

சிவாஜி, கந்தசாமி என்று ஸ்ரேயாவுக்காக பெரும் ரசிகர் கூட்டம் விசிலடித்து பரவசப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

ஒரே நேரத்தில் தெலுங்கும், தமிழும் அவரை கைவிட்ட பின் தானுண்டு தன் செல்ஃபிகள் உண்டு என்று ஊர் ஊராக திரிந்தார் ஸ்ரேயா. மீண்டும் தமிழுக்கு அவரை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மாதேஷ். இவர் இயக்குகிற படத்தில் ஸ்ரேயாதான் ஹீரோயின். ஆனால், காயுற கருவாட்டுக்கு கடல் மணலே மெத்தையல்லவா? இவரைப் போலவே படு பாதாளத்தில் தள்ளாடும் விமல்தான் இந்தப் படத்தில் ஸ்ரேயாவுடன் டூயட் பாடப் போகிறார்.