திரைச்செய்திகள்

இன்னும் படமே துவங்கவில்லை. அதற்குள் மூன்று முறை ‘மாநாடு’ படப்பிடிப்பை தள்ளி தள்ளி வைத்துவிட்டார் சிம்பு.

“தினமும் ஐந்து மணி நேரம்தான் வருவேன். சனி ஞாயிறு ரெஸ்ட் வேண்டும்” என்றெல்லாம் அதிரடி கண்டிஷன்களை அள்ளிவிட்டதால் மேலும் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கிறது மாநாடு. ‘தம்பிய அனுசரிச்சு படத்தை எடுத்துக்கோங்க’ என்று சிம்புவின் அப்பா டி.ஆரும் சொல்ல, ‘ஓவியத்துக்கு பிரஷ்ஷே புடுங்கலா இருக்கே’ என்று நொந்து போனாராம் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ‘படமே எடுக்கலேன்னாலும் பரவால்ல... உங்கிட்ட மாட்டி உசுரு விட முடியாதுப்பா’ என்கிற கண்டிஷனுக்கு வந்திருக்கும் அவர், வேறு பல முன்னணி ஹீரோக்களின் கதவை தட்டுவது உறுதி என்கிறது சினிமா வட்டாரம்.