திரைச்செய்திகள்

மீண்டும் ரஜினி நடிக்கும் ஒரு படத்தை தயாரித்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

ஆனால் ரஜினி மனதிலும் அந்த எண்ணம் இருக்க வேண்டுமே? சுத்தமாக இல்லையாம். ஏன்? ‘கபாலி’ படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும் போதே, “படத்தை நீங்கள்தான் வெளியிட வேண்டும். எந்த விநியோகஸ்தருக்கும் கொடுக்கக் கூடாது” என்கிற கண்டிஷனை முன் வைத்தாராம் ரஜினி. ஆனால் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு போயிருந்த நேரத்தில் படத்தை நாலா பக்கமும் பிரித்து விற்று விட்டார் தாணு.

சொல்லி வைத்த மாதிரியே படம் நஷ்டம் என்று ரஜினியை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அதே விநியோகஸ்தர்கள். அந்த கோபம் இன்னும் ரஜினியின் மனதிலிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தாணு தானே தன் படை பரிவாரங்களை விட்டு, ‘தாணுவுக்கு ரஜினி கால்ஷீட் தந்துவிட்டார்’ என்று செய்தியை கசிய விடுகிறாராம். மந்திர கம்பளத்துல ஏறி மல்லாக்க படுத்தாலும், தந்திர புத்தி தானாவே தரையிறக்கி விட்ரும்!