திரைச்செய்திகள்

பொதுத் தேர்தலுக்கு நிறைய பொழுது இருக்கு. அதற்குள் இரண்டு படங்களை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒரே மூச்சாக படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல். நின்று போன இந்தியன் 2 வுக்கு மூச்சு கொடுத்தவர், அப்படியே தன்னால் பல கோடிகள் நஷ்டத்திற்கு ஆளான ‘சபாஷ் நாயுடு’ விஷயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டாராம். ச.நா படம் துவங்கிய பிறகுதான் கவுதமி இவரை விட்டுப் போனார். கமலுக்கு கால் முறிந்தது. இந்தியன் 2 நின்று போனது. இந்த சென்ட்டிமென்ட் நாத்திக கமலையே கூட நசுங்க வைத்திருக்கலாம்... “அந்த படத்தை விட்டுத் தொலைங்க. நாம ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை ஆரம்பிக்கலாம்” என்று அதே லைகாவுக்கு கோரிக்கை வைக்க, அவர்களும் ஓகே என்று கூறிவிட்டார்கள்.  இதில்தான் பல வருடங்கள் கழித்து கமலுடன் இணைகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.