திரைச்செய்திகள்

தமிழில் நேரடியாக நடிக்க வந்த அமிதாப்பச்சனுக்கு அதற்குள் தலைவலி தைலம் தடவி விட்டார்கள். ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்ட அமிதாப், ஒரு வாரம் நடித்தும் கொடுத்தாராம்.

அதற்குள் படத் தயாரிப்பு நிறுவனம், வேறொரு நிறுவனத்துடன் கை கோர்த்துக் கொண்டது. பண பலமில்லாமல் தன்னை ஏமாற்றி கால்ஷீட் வாங்கிவிட்டதாக நினைத்த அமிதாப் கடும் கோபத்தில் இருந்தாராம். அவரை சமாதானப்படுத்த சென்ற எஸ்.ஜே.சூர்யாவிடம், “யூ ஆர் மை கோ- ஆர்ட்டிஸ்ட். நீங்க ஏன் பேச வர்றீங்க? தயாரிப்பாளரை அனுப்புங்க” என்று எரிந்து விழுந்தாராம். போன வேகத்தில் ரிட்டர்ன் ஆகிவிட்டார் எஸ்.ஜே.சூ. ஏணிதான் கையில இருக்கேன்னு எல்லா இடத்திலேயும் ஏறப்படாது...