திரைச்செய்திகள்

‘மாநாடு’ விஷயத்தில் சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் படப்பிடிப்பு தள்ளி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.

சிம்பு போடுகிற கண்டிஷன்களை மறுபரிசீலனை செய்யச் சொன்ன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சேஃப்டிக்காக வேறு பல ஹீரோக்களையும் சந்தித்து வருவதாக தகவல். வெங்கட் பிரபுவிடம் கதை கேட்ட தனுஷ், ஜெயம் ரவி இருவரும் “கதை சூப்பர். ஆனால் இப்ப கையில இருக்கிற படங்களை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் பொறுமையோடு காத்திருந்தால் நானே கால்ஷீட் தர்றேன்” என்றார்களாம் தனித்தனியாக. இதையெல்லாம் அறிந்த சிம்பு, மீண்டும் தரை இறங்கி வந்திருக்கிறாராம். ஜீவா, சிபிராஜ், சாந்தனு மாதிரியான வாரிசு நடிகர்களுக்கு ஆண்டவன் ஆட்டாம் புழுக்கையை கூட காண்பிக்கவில்லை. ஆனால் சிம்புவுக்கோ போகிற இடமெல்லாம் பூச்செண்டு. அதை புரிந்து கொண்டாரா என்றால் அதுதான் இல்லை!