திரைச்செய்திகள்

ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும் இன்னும் காதல் மிச்சமிருக்கிறதா? இல்லை எக்ஸ்பயரி டேட் முடிஞ்சாச்சா? இந்த கேள்விக்கு அந்த சிம்புவும் ஹன்சியுமே கூட கான்கிரீட்டாக ஒரு பதில் சொல்ல முடியாது.

இருக்கு... ஆனா இல்ல ரேஞ்சிலேயே ஓடிக் கொண்டிருக்கிறதாம் விஷயம். ஹன்சி நடிக்கும் ‘மஹா’ படத்திற்கு வரலாறு காணாத அளவுக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறார் சிம்பு. இதற்கு முன் தொடங்கப்பட்ட படங்களின் ஷுட்டிங்கையே த்ராட்டில் விட்டுவிட்ட சிம்பு, இந்த படம் சம்பந்தமான காட்சிகளுக்காக மெனக்கட்டு விசாரிக்கிறாராம். டைரக்டரிடமும் தயாரிப்பாளரிடமும் அவரே போன் போட்டு விசாரிப்பதால், மிச்சசொச்சம் லவ் இருக்கு என்கிற முடிவுக்கு வருகிறது யூனிட்.