திரைச்செய்திகள்

ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாக தமிழ்நாட்டை பதம் பார்த்த விசித்ரா, பெங்களூரில் ஒரு ஓட்டலை வைத்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார். எவ்வளவு நாளைக்குதான் கிச்சனும் கரண்டியுமாக திரிவது?

மீண்டும் சினிமாவில் நடிக்கிற ஆசை வந்துவிட்டது. சென்னைக்கு ஷிப்ட் ஆகிவிட்டார். ஒரு சீரியலில் நடித்து வரும் அவர், அப்படியே சினிமாவையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று களம் இறங்கியிருக்கிறார். முதலில் நான் இங்கதான் இருக்கேன் என்று சொல்லணுமே? அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு, அதில் சொல்லப்பட்ட கருத்து தொடர்பாக ஒரு ட்விட்டை போட்டிருக்கிறார். அஜீத் ரசிகர்களை அதை தாறுமாறாக ரீ ட்விட் பண்ணியும் வருகிறார்கள். விசித்ரா... இந்நேரம் இயக்குனர்களின் கண்களில் விழுந்திருக்க வாய்ப்புண்டு.