திரைச்செய்திகள்

வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் பொதுஜனம், அதுவே நடிகைகள் என்றால், நார் நார் நாராக கிழிந்தாலும் சரி. கிட்ட சென்று பார்த்துவிட வேண்டும் என்று கூட்டம் கூட்டமாய் குவிவது கோலிவுட்டின் ‘லாப’க்கேடு!

அதிலும் சமீபத்தில் ஒரு ஊருக்கு நகைக்கடை திறக்கப் போன நயன்தாராவுக்கு குவிந்த கூட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது தருணம். ஒருவரையொருவர் நசுக்கித் தள்ளியதோடு நிற்காமல் வீட்டிலிருக்கிற அண்டா குண்டாவெல்லாம் கூட நசுங்கிப் போகிற அளவுக்கு குழுமினார்கள். முண்டியடித்தார்கள். அந்தக் கூட்டத்தை பார்த்த நாளிலிருந்தே தேசியக் கட்சிகளும் சரி… திராவிடக் கட்சிகளும் சரி… நயன்தாரா வந்தால் நல்லாயிருக்குமே என்று யோசிக்க துவங்கியிருக்கின்றன. அவருக்கா தெரியாது? பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நழுவி வந்தார்.

அப்படிப்பட்ட நயன்தாராவே அதிமுக கொடிகள் சூழ, அம்மாவின் பெயர் பொறித்த ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றால்? நயன்தாராவின் மனசு அதிமுக பக்கம் சாய்கிறது என்றுதானே அர்த்தம்?

யெஸ்… தனது படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ கூட வருவதை தவிர்த்து வரும் நயன்தாரா, சென்னையில் நடைபெற்ற அம்மா ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பு நடத்திய விழாவில் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அம்மா அவார்ட்ஸ் என்று முதல்வரின் பெயரில் வழங்கப்பட்ட கேடயங்களை புன் சிரிப்போடு நயன்தாரா வழங்க, புதுவித மலர்ச்சியோடு அதை பெற்றுக் கொண்டார்கள் வீரர் வீராங்கனைகள்.

பின்குறிப்பு- இந்த விழாவில் கலந்து கொள்ள நயா பைசா வாங்கவில்லையாம் நயன்!

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.