திரைச்செய்திகள்
Typography

கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பட் பட்டென்று பொறி தெறிக்க பேசி வருகிறார் விஜய் சேதுபதி. தீப்பெட்டி ஒரு இடத்திலும் தீவட்டி இன்னொரு இடத்திலும் இருக்க வாய்ப்பே இல்லையே? என்று விசாரித்தால் அங்குதான் ட்விஸ்ட்!

அவர் நடித்து வரும் சங்கத்தமிழன் படத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள்தான் முக்கிய கதையாக இருக்கிறதாம். ஆலையை அகற்ற போராடும் இளைஞன் கேரக்டர் விஜய் சேதுபதிக்கு. அவர் பேசுகிற வசனங்கள் ஒவ்வொன்றும் மத்திய அரசின் காதுகளுக்கு கடுப்பேற்றும் என்பது மட்டும் நிச்சயம் என்கிறார்கள்.

படத்தில் பேசிய டயலாக்குகளைதான் நிஜத்திலும் பேசி பரபரப்பு கூட்டுகிறார் விஜய்சேதுபதி. கழுத்தை தாண்டி வந்தால்தான் கருத்து சுதந்திரம். அதுல கை வச்சுராதீங்க மத்தீஸ்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்