திரைச்செய்திகள்
Typography

மலையாள ஸ்டார் திலீப்புக்கும், அவரது காதல் மனைவி மஞ்சு வாரியருக்கும் ஏற்பட்ட பிரிவு இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்கப்புறம் வழக்கு, ஜெயில் என்று நாலு சுற்று நசுங்கி, மூணு சுற்று பிதுங்கிவிட்டார் திலீப்.

நல்லவேளையாக ஜெயிலை விட்டு பெயிலில் வந்தவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். இரண்டு படங்கள் தாறுமாறு ஹிட். இந்த நிலையில் மீண்டும் மஞ்சுவாரியரை சமாதானப்படுத்தும் வேலைகளில் அவர் இருக்க, மஞ்சுவோ தமிழ்நாட்டில். அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியர், தன் குடும்ப விவகாரங்களை மனம் விட்டு பகிர்ந்து கொண்டாராம் தனுஷிடம்.

மந்திரியிடம் கொடுத்த மனு மாதிரி, குப்பையா, கோட்டையா என்று அந்தரத்தில் நிற்கிறது மஞ்சுவின் மனக்கவலைகள்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்