திரைச்செய்திகள்

எத்தனை கோடிகள் போட்டு எடுத்தாலும் அண்டை மாநிலத்திற்கு போனால் அது டப்பிங் பட ரேஞ்சுக்குதான் மதிக்கப்படும். ஆனால் கேரளா, நம் தமிழ் படங்கள் இங்கு ரிலீசாகும் அதே தேதியில் அங்கும் வெளியிட்டு கொண்டாடி வருகிறது.

விஜய், சூர்யா, விஷால் போன்ற இளம் ஹீரோக்களுக்கு அங்கு ரத்ன கம்பள வரவேற்பே கிடைத்துவிடுகிறது. அப்படியிருந்தவர்களின் மனதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி வருகிறது அண்மைக்கால தமிழ்சினிமா. நம்பி தியேட்டரை ஒதுக்கிவிட்டு அட்வான்ஸ் புக்கிங்கும் செய்துவிட்டு காத்திருந்தால், படமே வெளியாவதில்லை.

சண்டக்கோழி2, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களுக்கு இந்த நிலைமை. அதை மறந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய கேரள தியேட்டர்களை மீண்டும் பழைய அதிர்ச்சிக்கு தள்ளியிருக்கிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. சுமார் 100 தியேட்டர்களில் அறிவிக்கப்பட்ட படம் கடைசி நேரத்தில் ஆப்சென்ட் போட்டதால் அத்தனை ரசிகர்களும் அப்செட்! தானா வந்து தறியில விழுற பட்டுப்புடவையை மடிச்சு பக்குவமா தர்ற அளவுக்கு கூட இல்லையே கடைசி நேர நிலவரம்ஸ்?