திரைச்செய்திகள்
Typography

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படப்பிடிப்பில் லைட்மேன் ஒருவரின் தலையில் கனமான லைட் ஒன்று விழுந்து பல வாரங்கள் கோமாவிலேயே இருந்து பின் இறந்தும் போய்விட்டார்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தால் பிரச்சனை ஆகும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் சற்றே தயங்கியது. சில வாரங்களுக்குப் பின் தயாரிப்பாளர் சார்பாக அந்த குடும்பத்தை சந்தித்த நிர்வாகிகள் 20 லட்சத்திற்கான காசோலையை கருணைத் தொகையாக வழங்கியிருக்கிறார்கள். காதும் காதும் வைத்தது போல விளம்பரத்திற்கு ஆசைப்படாமல் இதை செய்திருப்பதே தனி பாராட்டிற்குரியது.

இந்த நிகழ்வு நடந்து சில மணி நேரங்களில் அந்த குடும்பத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்ட விஜய், “விரைவில் நேர்ல வந்து பார்க்குறேன்” என்று கூறியிருக்கிறாராம். நல்ல மனங்களுக்கு வாழ்த்துக்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS