திரைச்செய்திகள்

இயக்குனர் ஷங்கர், விஜய், தனுஷ் மூவருமே சொல்லி வைத்தார் போல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு காரும் சுமார் 12 கோடியிலிருந்து 15 கோடி மதிப்புள்ளவை.

இந்த கார்களுக்கு வரி செலுத்துகிற விவகாரத்தில்தான் சிக்கல். தங்கள் கார்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்கச் சொல்லி மூவருமே நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டிருப்பதால், சட்டத்தின் இடுக்கை சாமர்த்தியமாக பயன்படுத்தியிருக்கிறார்களோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

இந்த தகவல் வெளியான நாளிலிருந்தே சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்டும் வருகிறார்கள். “படத்தில்தான் நியாயம் பேசுவாய்ங்க. நிஜத்தில் அவ்வளவு தெள்ளவாரித்தனமும் பண்ணுவாய்ங்க” என்று கடுஞ்செல்லால் கல்லெறிந்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். அதுவும் விஜய் மீது ஒரு அரசியல் அச்சமும் நிலவுவதால், ஆளுங்கட்சியே இந்த அர்ச்சனையை பின்புறமிருந்து முடுக்கி விடுவதாகவும் ஒரு பேச்சு!