திரைச்செய்திகள்

நான் நினைச்சா யாருக்கு வேணும்னாலும் பட்டுத்துணி சார்த்தி பஞ்சாமிர்தம் ஊட்டுவேன் என்கிற அளவுக்கு துணிச்சல்காரியாகிவிட்டார் நயன்தாரா.

தனக்கு மேக்கப் போட்டு வரும் ஒரு சாதாரண ஒப்பனை கலைஞனை, கால்ஷீட் மேனேஜராக்கி அவருக்கு கவுரவம் சேர்த்தவர் நயன். இப்போது மயில்வாகன் என்பவரை தான் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார்.

யாரிந்த மயில்? விக்னேஷ்சிவனின் மேனேஜர். பொதுவாகவே தன்னை சுற்றியிருக்கும் தொழிலாளர்களை வேறொரு லெவலுக்கு கொண்டு செல்லும் விஷயத்தில் நயனுக்கு நிகர் அவரே. இப்போதும் மற்ற மற்ற நடிகைகளிடம் பணியாற்றும் ஹேர் டிரஸ்சர்கள், கார் டிரைவர்கள், மேக்கப் அசிஸ்டென்டுகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட, அதிக சம்பளத்தை தன் படத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நயன். மேட்டூர் நிரம்புனா கல்லணையிலும் கண்ணீர் முட்றது இயற்கைதானே?