திரைச்செய்திகள்
Typography

அண்மைக்காலமாக தான் நடிக்கும் படங்களின் சம்பளத்தை சின்ன சின்ன நாமக்கட்டிகளாக பெற்று வருகிறார் ஆர்யா.

லாபத்துல பங்கு என்று சொல்லி ஒரு சிறு அட்வான்சை கையில் திணிக்கும் தயாரிப்பாளர்கள், கடைசியில் “படம் புட்டுக்குச்சே... என்ன பண்றது?” என்று கதவை குளோஸ் பண்ணிவிடுகிறார்கள். ‘நல்லதுக்கு காலமில்லே’ என்று வெறுத்துப் போயிருந்த ஆர்யாவுக்கு ‘மகாமுனி’ பட ரிசல்ட், கீழே விழுந்தாலும் மேலே சிராய்ப்பில்லே கதையாய் முடிந்ததில் ஹேப்பியோ ஹேப்பி. படம் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் ஆர்யாவுக்கு பேசப்பட்ட மூன்று கோடி சம்பளத்தை முழுசாக கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா!

BLOG COMMENTS POWERED BY DISQUS