திரைச்செய்திகள்

திருமணத்திற்கு பின் கதாநாயகிகளுக்கு மார்க்கெட் போய்விடும் என்கிற நடைமுறையை அடித்து நொறுக்கிவிட்டார் சமந்தா!

தெலுங்கு, தமிழ் என்று அவரது கால்ஷீட்டுக்காக தவம் கிடக்கிறார்கள் இயக்குனர்கள். என்ட் கார்டுக்கு பிறகும் ஒரு துண்டு கார்டு விழுந்திருக்கே என்று சந்தோஷப்பட்ட சமந்தா, அதற்காக கண்ட கண்ட படங்களிலும் நடிக்காமலிருப்பதுதான் ஆறுதல். அப்படியும் ஒரு அசவுகர்யம். இவருக்கும் மேனேஜர் விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷ்தான். சமந்தாவை கூட சந்தித்து பேசிவிடலாம்... இந்த ஜெகதீஷை பிடிக்க முடியலேப்பா... என்று புலம்புகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

மிகப்பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய இயக்குனர்கள் தவிர சற்றே செகன்ட் லெவல் ஆட்கள் அணுக முடியாத உயரத்திலிருக்கும் ஜெகதீஷால், சமந்தாவுக்கு போக வேண்டிய சத்தான வாய்ப்புகள் கூட சங்கடத்தில் கிடக்கின்றனவாம்!