திரைச்செய்திகள்
Typography

ஏற்கனவே தயாரிப்பாளர் தாணுவுக்கும், தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் அட்ஹாக் கமிட்டியிலிருக்கும் ஜே.எஸ்.கே சதீஷுக்கும் முட்டல் மோதல். இந்த லட்சணத்தில் தாணுவின் செயல் ஒன்று இருவருக்கும் இன்னும் பகையை கோர்த்துவிட்டதாம்.

அசுரன் படத்திற்காக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்த தாணு, சங்கக் கட்டுப்பாடுகளை மீறி அரை பக்க அளவுக்கு கொடுத்துவிட்டார். ஏற்கனவே ரெமோ படத்தின் போது இப்படி விதி மீறியதற்காக ஐம்பது லட்சத்தை சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து பிடுங்கியது சங்கம். இப்போதும் அதே எச்சில் ஊறும் நாக்குடன் தாணுவுக்கு போன் அடித்த சதீஷ், வார்த்தைகளை சற்று ஜாஸ்தியாகவே விட்டுவிட்டாராம்.

கடுப்பான தாணு தயாரிப்பாளர் சங்க அட்ஹாக் கமிட்டியின் முக்கியஸ்தரான பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஜே.எஸ்.கே மீது புகார் கூறினாராம். ‘ரொம்ப பேசுறாரு. கண்டிச்சு வைங்க’ என்று கூறிவிட்டு சென்றதாக தகவல். நாற்காலி பலத்துலதான் நாக்கே புரளுது ரொம்ப பேருக்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்