திரைச்செய்திகள்
Typography

சிரஞ்சீவி நடிப்பில் வெளிவரும் புதிய படம் சைரா நரசிம்ம ரெட்டி.

சுமார் 350 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் இன்னொரு பாகுபலி என்கிறார்கள் இப்பவே. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் முக்கியமான பாத்திரங்கள் பலரும் தமிழ்நாட்டின் செல்லங்கள். அதாவது விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா உள்ளிட்ட மற்றும் பலர்.

இந்த ஒரு காரணத்திற்காகவே அதிக தியேட்டர்களை வளைத்து வருகிறார்களாம் விநியோகஸ்தர்கள். அக்டோபர் 2 ல் வெளியாகும் நரசிம்ம ரெட்டி, அதற்கு முந்தைய வாரங்களில் வெளியாகிய சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளையையும், சூர்யாவின் காப்பானையும் ஷேக் பண்ணி தியேட்டரை விட்டே கிளப்பிவிட்டால் என்னாவது என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளதாம். டப்பிங் படமெல்லாம் ‘டாப்’பிங் படமாக வந்தால், உள்ளூர் மேக்கிங் கவலைப்படதான் செய்யும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS