திரைச்செய்திகள்
Typography

‘மக்களே... வெயிட் பண்ணுங்க. பெரிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகுறேன்’ என்று வடிவேலு அவரே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதைக்கூட, நம்ப தயாராக இல்லை கோடம்பாக்கம்.

பிரச்சனை இல்லாமல் அவர் ஒரு படத்தில் நடிக்கட்டும். அப்பறம் போகலாம் அந்தப்பக்கம் என்கிறார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக மதுரையில் தஞ்சமடைந்த வடிவேலு மண்டைக்குள் ஃபுல் ஸ்டாக்கை ஏற்றி வைத்திருக்கிறாராம். இதுவரை தன் படங்களில் அவர் கொண்டு வந்த காமெடிகள் அத்தனையும் அவர் வாழ்வில் நிகழ்ந்தவைதான்.

இந்த முறை கிடைத்த இந்த கேப், மதுரையிலிருக்கும் அவரது சொந்த பந்தங்களிடமும் சுற்று வட்டார பசங்களிடமும் நேரம் ஒதுக்கி பேச வைத்தது. விளைவு? கொத்து கொத்தாக காமெடி சம்பவங்களை மண்டைக்குள் போட்டு மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஆக்கி வைத்திருக்கிறார். எந்த படத்துக்கு கொடுத்து வச்சுருக்கோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS