திரைச்செய்திகள்
Typography

விஜய் 63 என்று அழைக்கப்பட்ட ‘பிகில்’ வேலைகள் முடிந்தன. இனி விஜய் 64 தான். ஒரு காலத்தில் வடிவேலு, விவேக்குடன் பயணித்த விஜய் சில கசப்பான சம்பவங்கள் காரணமாக அவ்விருவரையும் கழற்றி விட்டார்.

வெகு காலம் கழித்து இப்போதுதான் மீண்டும் விவேக் உள்ளே வந்திருக்கிறார். இந்த நிலையில், தன் அடுத்த படத்தின் காமெடி ஏரியாவுக்கு ‘ஃபிரஷ்ஷாக ஆட்களை பாருங்க’ என்று கூறிவிட்டாராம்! விஜய் 64 படத்திற்காக யு ட்யூபில் கலக்கி வரும் காமெடி ஷோ கிங்குகளை ஒரே நேரத்தில் அள்ளி வந்து ஸ்கிரின் டெஸ்ட் எடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ஹிப் ஹாப் ஆதியின் பலமே இந்த மாதிரி ஆட்களை சினிமாவுக்குள் கொண்டு வந்ததுதான். இப்போது விஜய்யே அப்படியொரு முடிவெடுத்திருப்பதால் யு ட்யூப் வட்டாரமே ஹேப்பி.

BLOG COMMENTS POWERED BY DISQUS