திரைச்செய்திகள்
Typography

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நவம்பரில் துவங்குவதாக ஏற்பாடு. முன்னதாக பாகுபலி அனுபவசாலியான எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் படப்பிடிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் மணிரத்னம்.

காட்சியின் குறுக்கே எலி ஓடினால் கூட, ‘எங்கே அனிமல் டாக்டர் சர்டிபிகேட்?’ என்று கெடுபிடி காட்டும் பிராணிகள் நல வாரியத்தை சமாளித்தால்தானே நூற்றுக்கணக்கான யானை, குதிரைகளை வைத்து சரித்திரப்படம் எடுக்க முடியும்? அதற்கு தோதான நாடு தாய்லாந்துதானாம். காடுகளும், தேவைப்படுகிற அளவுக்கு யானைகளும் கிடைக்கிற நாடும் அதுதான். எனவே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் 90 சதவீதத்தை அங்கேயே முடிப்பதாக முடிவெடுத்திருக்கிறாராம் மணிரத்னம்.

அண்டை நாட்டின் மீது படை எடுப்பது கூட ஈஸி. அண்டை நாட்டின் மீது படையெடுத்தவர்களின் கதையை படமெடுப்பதுதான் கஷ்டம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS