திரைச்செய்திகள்
Typography

‘அவங்க நடிச்ச படமெல்லாம் ஓடுது’ என்கிற சென்ட்டிமென்ட் கிளம்பினால் போதும். சம்பந்தப்பட்ட நடிகைக்கு அர்த்த ராத்திரியிலும் அலங்காரக் குடைதான்! அப்படியொரு சென்ட்டிமென்ட் பூங்கொத்தாக மாறியிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

நான்.. நீ... என்று போட்டிப் போட்டுக் கொண்டு வாய்ப்பளிக்கிறது கோடம்பாக்கம். இந்த நிலையில்தான் கால்ஷீட் தேதிகளை கரெக்டாக வைத்திருக்க முடியாதபடி விதி நெருக்கிவிட்டது அவரை.

விக்ரம் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருந்த ப்ரியா, அந்த தேதிகள் போக மீதியை இந்தியன் 2 வுக்கு கொடுத்திருந்தார். ஆனால் நினைத்த நேரத்தில் துவங்கப்படவில்லை விக்ரம் படம். வேறு வழியில்லாமல் அந்த படத்திலிருந்தே விலகிக் கொண்டார் ப்ரியா.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்