திரைச்செய்திகள்
Typography

நெட் பிளிக்ஸ், அமேசான் சீரியல்கள் வந்தாலும் வந்தது. ஆபாசம் முக்காடு போடாமலே வீட்டுக்குள் என்ட்ரி ஆகிவிட்டது. நார்த் பக்கம் இன்னும் மோசம். லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வகை சீரிஸ்கள் படு சக்சஸ்.

தமிழில் வரும் ஒன்றிரண்டு சீரிஸ்களில் ஆபாசமும் வன்முறையும் கெட்ட வார்த்தைகளும் தலை விரித்தாடி வருகின்றன. இவற்றுக்கு சென்சார் தேவை என்கிற கூக்குரல்கள் இன்னும் ஒலிக்க ஆரம்பிக்காத வரைக்கும் இது நீளும்.

ஓகே... விஷயம் இதுதான். ‘ஆடை’ படத்தில் டிரஸ்சே இல்லாமல் நடித்த அமலாபால் இப்போது இந்த லஸ்ட் ஸ்டோரிஸ் பக்கம் தலைகாட்டப் போகிறாராம். கியாரா அத்வானி என்ற நடிகை தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்டார். இவரது லஸ்ட் ஸ்டோரி ஒன்றை கவனித்த இயக்குனர், ‘ஐயய்யோ... வேண்டாம்’ என்று கடைசி நேரத்தில் கியாரா அத்வானியை கழற்றி விட்டார். அப்படியிருக்க... அமலாபால் இனி தமிழில் நடிப்பது நடக்குமா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்