திரைச்செய்திகள்
Typography

அசுரன் படம் விநியோகஸ்தர்களுக்கு என்ன மாதிரியான அவ நம்பிக்கையை கொடுத்ததோ... பலர் தட்டிக் கழித்திருந்தார்கள். நம்பிக்கையோடு படத்தை தானே வெளியிட்ட கலைப்புலி தாணுவுக்குதான் கொண்டாட்டம்.

அவரது லாபமாக மட்டும் சுமார் 35 கோடி வரும் என்கிறார்கள் தியேட்டர் வட்டாரத்தில். லண்டனில் படப்பிடிப்பிலிருக்கும் தனுஷுக்கு கொள்ளை கொள்ளா சந்தோஷம். இந்தப்படம் தவிர இன்னும் மூன்று படங்களில் நடிக்க தாணுவிடம் ஒப்பந்தம் போட்டிருக்கும் தனுஷ், அதை மேலும் நீடித்தாலும் ஆச்சர்யமில்லை.

இது போக வெகு காலமாக முடங்கிக் கிடக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இப்பவே மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம் விநியோகஸ்தர்கள். கொண்டைக்கடல மூக்குல கோழி முட்டைய நிக்க வைக்கிற வித்தை தெரிஞ்சவங்க நடமாடுற ஏரியா. நல்லா சம்பாதிங்கய்யா...!

BLOG COMMENTS POWERED BY DISQUS