திரைச்செய்திகள்

நடிகர் விஜய் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்த ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருமா? என்ற கேள்வி பலமாகவே இருந்தது. அதற்குக் காரணம் இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில், விஜய் பேசிய சிற்றுரையில் கூறிய சில அரசியற் கருத்துக்கள்தான் என்கிறார்கள்.

இதனால் இத்திரைப்படம் தீபாவளிக்கு வருவதற்கான பல தடைகளை அரசியற் தரப்புக்கள் முன்னெடுப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், பிகில் படத்துக்கான சென்சார் நிறைவுபெற்றதாகவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அறிவித்தபடி தீபாவளிக்கு 'பிகில்' நிச்சயம் திரைக்கு வரும் எனவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, அடலீயின் இயக்கத்தில் வரும் இத்திரைப்படத்தினை, கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.