திரைச்செய்திகள்

தன்னை ‘பைரவி’ படத்தில் அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கலைஞானம் சொந்தமாக வீடு இல்லாமலிருக்கிறார் என்பதை அறிந்து அவருக்கு வீடு வாங்கித் தருவதாக வாக்குக் கொடுத்தார் ரஜினி.

புரோக்கர்களை நாடி, ஆன்லைன்களுக்குள் ஓடி வீடு தேடிய கலைஞானத்திற்கு உடனே கைவசப்படவில்லை அது. வீடு பார்த்தாச்சா... வீடு பார்த்தாச்சா... என்று சில முறை கேட்டுவந்த ரஜினி, ஒரு சந்தர்பத்தில் நேரில் அழைத்து மொத்த பணத்தையும் கொடுத்தாராம். இனி உங்கள் பாடு என்று அவர் ஒதுங்கிக் கொள்ள... மிகச் சிறந்த ஒரு அபார்ட்மென்ட்டை கண்டுபிடித்துவிட்டார் கலைஞானம்.

கிரகப் பிரவேசத்திற்கு நேரில் வந்திருந்து வாழ்த்தினார் ரஜினி. அரசே வீடு கொடுக்கறதா இருந்திச்சே, அதையும் தனியா கொடுத்துட்டா கலைஞானம் வாழ்றாரோ இல்லையோ, கலை வாழும்ல?