திரைச்செய்திகள்

ஆயிரத்தெட்டு குடங்களுடன் சிம்புவின் வீட்டை சுற்றி வந்து கரகம் எடுத்தாலும் தம்படி பணம் திரும்பி வராது போலிருக்கிறது.

பல கோடிகள் ஆட்டையை போட்டுவிட்டு எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமலிருக்கிற அந்த குடும்பத்தை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று துடிக்கிற தயாரிப்பாளர்கள், எல்லா ‘கேட்’டும் ஒன் வே ‘கேட்’டாவே இருக்கே? என்று கவலைப்பட்டு கண்ணீர் வடிப்பதும் தொடர்கிறது.

இந்த நிலையில்தான் பாரதிராஜா தலைமையில் சிம்புவால் பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ‘ஏம்ப்பா... ஒருத்தர் அனுபவம் இன்னொருத்தரை வழி நடத்துணுமா இல்லையா? ஏன் ஒத்தாப்ல போய் சிக்குனீங்க?’ என்றாராம் அவர்.