திரைச்செய்திகள்

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா அல்லது சூர்யாவா என்ற கேள்வி, கடந்த சிலநாட்களாக கோடாம்பாக்கத்தில் பரபரப்பாக உலாவியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில், வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துள்ளது. அந்தப் படத்தின் நாயகன் சூரி என்பதும் உறுதியாகியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பினை மேற்கொள்ளும், ஆர்எஸ் இன்ஃபோடெய்மெண்ட் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் , “நாங்கள் உலகத்தரமான இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து எங்களின் 14வது படத்தினைத் தயாரிக்கின்றோம். விரைவில் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவலை தெரிவிப்போம் எனவும் அறிவித்துள்ளது.