திரைச்செய்திகள்

‘சங்கத் தமிழன்’ படத்தை யாருமே வாங்க முன் வராத நிலையில் லிப்ரா புரடக்ஷன் ரவீந்தர் வாங்கி வெளியிட முன் வந்தார். யாராவது விதை போட்டு மரம் வளர்த்தால் கிளையை வெட்டதான் ஒரு கூட்டம் வருமே? வந்தாச்சு!

சங்கத் தமிழன் படத்தை தயாரித்திருக்கும் விஜயா புரடக்ஷன் தங்களுக்கு நிலுவை பாக்கி வைத்திருப்பதாக கிளம்பிவிட்டார்கள் சில ஏரியா விநியோகஸ்தர்கள். கிட்டத்தட்ட இரண்டு கோடி வரைக்கும் கணக்கு கொடுக்கிறார்கள். எண்ணி வச்சுட்டு படத்தை கொண்டாங்க என்பது இவர்கள் நிபந்தனை.

ஆனால் செட்டில் பண்ணி கிளியர் பண்ண வேண்டிய தயாரிப்பு தரப்பு இந்த நிமிஷம் வரைக்கும் கப்சிப்! லிப்ராவே முட்டி மோதி வரட்டும் என்று நினைக்கிறார்களாம். மொளகா கடிச்சது ஒருத்தர்... நாக்கை தொடைச்சது இன்னொருத்தரா?