திரைச்செய்திகள்

தமிழில் எந்த பத்திரிகைகளுக்கும் பேட்டியளிப்பதில்லை நயன்தாரா. அதே போல எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் வருவதுமில்லை.

இவ்விரண்டு விஷயங்களாலும் பெரிதாக கவனிக்கப்பட்ட அவரை இன்னமும் விடாமல் துரத்திக் கொண்டும் அது குறித்து விமர்சனம் செய்து கொண்டும் இருக்கிறார்கள் சினிமாவுலகத்தில். ‘நான் இப்படிதான்.... முடிஞ்சா சகிச்சுக்கோ. இல்லேன்னா போ’ என்பது போலவே தொடர்கிறார் அவரும்.

இந்த நிலையில்தான் முன்னணி ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்காக போஸ் கொடுத்த நயன் அடிஷனல் வரமாக இன்டர்வியூவும் கொடுத்திருக்கிறார். நான் இப்படி எல்லா நிகழ்ச்சியையும் புறக்கணிக்கிறேன் என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் நயன், ஒரு விஷயத்தை சொல்லி அதிர விட்டிருக்கிறார்.

நிகழ்ச்சிக்கு வந்து பேசினால் அவர் சொல்லாத விஷயத்தையும் சொன்னதாக சித்தரிக்கிறார்களாம். நெல்லை படம் பிடித்தால் அதை சோளமாகக் காட்டுகிற கேமிரா எதுவும் புதுசா கண்டு புடிச்சுருக்காங்களா, நமக்கு தெரியலையே?