திரைச்செய்திகள்

வெற்றிமாறனையே லேசாக வியர்த்துக் கொட்ட வைத்துவிட்டது ‘அசுரன்’ பட வெற்றி. நாலாபுறத்திலிருந்தும் பாராட்டு மழை அடித்தாலும், அடுத்த என்ன பண்றது என்கிற குழப்பத்தையும் கூடவே அடிக்கிறது சுச்சுவேஷன். ஏன்?

அசுரன் தயாரிப்பில் இருந்தபோது வெற்றிமாறனே தன் வாயால் அறிவித்த ஒரு படம்தான் பிரச்சனை. காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க லோ பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். ‘அசுரன் ஹிட் உங்க மேல் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியிருக்கு.

இப்ப எதுக்கு சூரியோட காம்பினேஷன், பெரிய ஹீரோ கூப்பிட்டா போக வேண்டியதுதானே?’ என்கிறார்களாம் நட்பு வட்டத்தில்! அதற்கேற்ற மாதிரி சூர்யாவும் அழைத்து கதை கேட்டிருக்கிறார். சூரி போய் சூர்யா வந்தா நமக்கு நல்லாயிருக்கும். சூரிக்கு நல்லாயிருக்குமோ?