திரைச்செய்திகள்

தனுஷ் நடித்த அசுரன் தாறுமாறான ஹிட். இப்படியொரு ஹிட்டை பார்த்து வெகு நாளாச்சு தாணுவுக்கும் தனுஷுக்கும். இந்த சந்தோஷத்தை பிரஸ்சை கூட்டி கொண்டாட ஆசைப்பட்ட தாணுவுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

லண்டனில் ஷுட்டிங்கிலிருக்கும் தனுஷ், ‘வர நேரமில்லையே’ என்று கூறிவிட்டாராம். அப்படியே இன்னொரு ஏமாற்றம் தாணுவுக்கு. அசுரன் ஹிட்டுக்குப்பின் சூர்யாவும் வெற்றிமாறனும் சந்தித்தார்கள். இந்த சந்திப்பை அப்படியே ஹிட் காம்பினேஷனாக்க முயன்றாராம். ஆனால் சூர்யா பேமிலியே குறுக்கே படுத்து தடுக்கிறதாம்.

தாணுன்னா வேணாம். வேற தயாரிப்பாளர்னா ஓ.கே என்கிறார்களாம். அப்படியென்ன அவர் மீது வெறுப்பு? இந்த கேள்வி இப்போது இன்டஸ்ட்ரியே கேட்டு கேட்டு புகைகிறது.