திரைச்செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்தாலும் ஆச்சர்யமில்லை. ஆனால் கூலாக இருக்கிறார் அவர். சில தினங்களுக்கு முன் அவரை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் வெற்றிமாறனின் பட்டறையில் பயின்ற உதவி இயக்குனர் ஒருவர்.

கதை நல்லாயிருக்கு. நமக்கு நிறைய தீனி இருக்கும் போல. எப்ப வேணா ஷுட்டிங் போகலாம் என்றாராம் சீமான். இதே படத்தில் ஜி.வி.பிரகாஷும் முக்கிய ரோலில் நடிப்பதாக ஏற்பாடு. பரபரவென வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால் இப்போதிருக்கிற நிலையில், சீமானை வெளியில் விடுவாங்களா? ஒரு வருஷத்துக்கு ஒண்ணுமே பண்ண முடியாம போயிட்டா என்ன பண்றது? என்றெல்லாம் அச்சம் வந்திருக்கிறதாம் படக்குழுவுக்கு.