திரைச்செய்திகள்

தமிழ்சினிமாவில் இதுவரை வந்த போலீஸ் கதைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு காவியமாக நிற்கிறது மிக மிக அவசரம். உயர் போலீஸ் அதிகாரிகளே படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார்கள்.

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு இருவரும் படத்தை வியந்தது தனிக்கதை. நிஜம் இப்படியிருக்க... சொன்ன தேதியில் இப்படத்தை வெளியே கொண்டுவர முடியாத நிலை. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மிக மிக அவசரம் வெளிவர முடியாதளவுக்கு இடையூறு செய்தவர்களை கண்டித்து அறிக்கையே வெளியிட்டார்.

சில பல பேச்சு வார்த்தைகளுக்கு பின் இதே படத்தை நவம்பர் 8 ந் தேதி வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம். அப்போது அரசே இப்படத்தை வெளியிட துணை நிற்கும் என்கிறார்கள்.