திரைச்செய்திகள்

பிகில் படத்தின் கதை என்னுடையது என்று கோர்ட்டுக்கு போன உதவி இயக்குனர் கே.பி.செல்வாவுக்கு கீழ் கோர்ட்டில் சொன்ன தீர்ப்பு பகீர் ரகம். அப்பீல் கூட போகக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியது நீதிமன்றம்.

ஆனாலும் அதிலிருக்கிற ஓட்டை ஒன்றை பெரிதாக்கி அதன் வழியாக நுழைந்துவிட்டார் அவர். இன்னும் ஒரு வாரத்தில் படம் வெளியாகவிருக்கிற நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு போட்டிருக்கிறார்.

இந்த குறுக்கு சால் அதிர்ச்சியை எதிர்பார்த்திராத அட்லீ பலத்த ஷாக்காகியிருக்கிறாராம். ராப்பகல் பாராமல் இறுதி கட்ட பணிகளில் இருக்கும அட்லீ நடுவில் கோர்ட்டுக்கும் நேரம் ஒதுக்குவது எப்படி என்று புரியாமல் தவிக்கிறாராம்.

நல்லவேளையாக இறுதி தீர்ப்பை கால வரையறையின்றி ஒத்தி வைத்திருக்கிறது கோர்ட். யானையை பெக்குறது ஒங்க வேல. எரிச்சல மூட்றது எங்க வேல!