திரைச்செய்திகள்

கும்கி, மைனா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன், தற்போது தனுஷ்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரயிலில் தொடரும் கதையாம்.

ரயிலில் கேட்டரிங் சர்வீஸ் செய்யும் இளைஞராக தனுஷ் நடிக்கிறாராம்.ரயில் வெளியில் பார்க்க பிரமாண்டமாக இருந்தாலும், உள்ளே படப்பிடிப்புக்கான இடம் என்பது ஒன்றரையடிதான் என்று கூறும் பிரபு சாலமன், இந்த படத்தின் படப்பிடிப்பில் அதிகம் கஷ்டப்பட்டது கேமிராமேன்தான் என்று கூறுகிறார். கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் இடத்தில் கேமிராவை தோளுக்கு மேல்தான் ஷாட் வைத்து ஷூட் பண்ண வேண்டிய சூழலில் வெகுவாக சிரமப்பட்டார் என்று கூறுகிறார்.

சென்னை டு டெல்லி செல்லும் ரயிலில் நடக்கும் கதை போல படத்தை எடுத்து உள்ளதாகவும், இந்த படம் ரயிலில் ஜன்னலோர இருக்கையைப் பிடித்து அமர்ந்த ஒரு பயணியின் ரயில் பயண ரசனை அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் பிரபு சாலமன் கூறியுள்ளார். ரயிலில் ஒரு காட்சி அதுவும், படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஏன்று ஒன்று வந்தாலே படம்  சூப்பர் ஹிட் என்பது தமிழ் சினிமாவின் ஒரு சென்டிமென்ட். படம் முழுக்க ரயில் காட்சிகள் என்றால் படத்தின் ஹிட் தாறுமாறுதான் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.