திரைச்செய்திகள்
Typography

தரமணி படத்திற்கு பிறகு தன் மார்க்கெட்டை சிமென்ட் ஜல்லி கொட்டி சரி செய்திருக்க வேண்டிய ஆன்ட்ரியா, வந்ததும் பழமில்ல, போனதும் கிழம் இல்ல என்கிற விட்டேத்தி சிந்தனைக்கு போய்விட்டார்.

வெற்றியை கொண்டாடாத ஆன்ட்ரியாவை வெற்றி மட்டும் சீண்டுமா என்ன? அதற்கப்புறம் அடங்கிக் கிடந்த ஆன்ட்ரியா திடீர் ஆவேசமாகி படங்களில் கமிட்டாகி வருகிறார். அவ்வப்போது ஸ்டேஜ் ஷோவும் செய்து வருகிறார்.

இப்போது விஜய் 64 படத்தில் அவருக்கு முக்கிய ரோல் வழங்கப்பட்டுள்ளது. தன்னை அணுகிய லோகேஷ் கனகராஜிடம், கதை கூட கேட்க மாட்டேன். உங்க மேல நம்பிக்கை இருக்கு என்றாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்