திரைச்செய்திகள்
Typography

வதந்திகள் ஆயிரம். ஒவ்வொரு வதந்திக்கு பின்னாலும் ஒவ்வொரு சுவாரஸ்யம். பிகில் ஊதிய ஹீரோவின் 65 வது படம் எனக்குதான் என்று சொல்லிக் கொண்டு திரியும் இயக்குனர்களில் அந்த ஊர் அரசும் ஒருவர்.

ஏன் இவ்வளவு நம்பிக்கையோடு சொல்கிறார்? விசாரிக்கும் போதுதான் விஷயமே புரிகிறது. மேற்படி ஹீரோ தன் அப்பா தயாரிப்பில் ஒரு படத்தை தர முடிவெடுத்திருக்கிறார். கால்ஷீட் மட்டும்தான் இவர் பொறுப்பு. கதை, இயக்குனர், பட்ஜெட்டெல்லாம் அப்பாவின் பொறுப்பு.

இந்த உடன் படிக்கையை அறிந்து கொண்டார் டைரக்டர் ஊர் அரசு. அப்பாவை சரி கட்டினால் போதுமே? ஊர் அரசுவின் அப்ரோச் பிகில் ஹீரோவுக்கு தெரியுமோ, தெரியாதோ... அவர் பாட்டுக்கு நிம்மதியாக இருக்கிறது. ரசிகர்கள்தான் அதை தொலைத்துவிட்டு திரிகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்