திரைச்செய்திகள்
Typography

ரஜினிஸம். திரும்புகிற இடமெல்லாம் ரஜினி புகழ் பாடும் ஒரு ரெஸ்ட்ராரென்ட்தான் இது. துபாயில் ஒரு முக்கியமான இடத்தில் இந்த கடையை திறந்திருக்கிறார் ரஜினியின் படு தீவிர ரசிகை ஒருவர்.

எங்கு திரும்பினாலும் ரஜினியின் படங்கள்தான்! அங்கிருக்கும் தமிழர்கள் அநேகம் பேர் இந்த ரெஸ்ட்ராரென்ட்டை மொய்த்து வருகிறார்கள். இருந்தாலும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ந் தேதிதான் கிராண்ட் ஓப்பன் செய்யப் போகிறார் ரசிகை சவீதா.

இதற்கிடையில் வலைப்பேச்சு யு ட்யுப் சேனல் சவீதாவை துபாயிலேயே சந்தித்து பேட்டி ஒன்றை வெளியிட, ரஜினியின் பார்வைக்கு போனது. அப்புறமென்ன? சவீதாவின் வாழ்நாள் கனவை நிறைவேற்றி விட்டார் ரஜினி. அவரை நேரில் வரவழைத்து போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

இதே போல ஒரு பீட்ஸா கடையை சென்னையில் திறந்திருக்கிறார் இன்னொரு ரசிகர். ஆனால் அது ரஜினியின் பார்வைக்கு போனதா, அதுதான் தெரியவில்லை.

சபீதாவுடனனான வலைப்பேச்சுச் செவ்வி :

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்