திரைச்செய்திகள்
Typography

டெல்லிக்கு போன விஜய் 64 படக்குழு இன்னும் அங்கேதான் இருக்கிறது. மளமளவென சுருட்டித் தள்ளுகிறார் லோகேஷ் கனகராஜ். தினந்தோறும் விஜய்யிடம் பேசி வரும் இவர், கைதி ஹாலிவுட் படத்தின் தழுவல் என்கிற பேச்சுக்கும் விளக்கம் அளித்தாராம்.

அதை ஏற்றுக் கொண்ட விஜய் நான் உங்களை முழுசா நம்புறேன். சந்தோஷமா வேலையை பாருங்க என்று கூறியிருப்பதாக தகவல். இதற்கிடையில் எல்லா பட ஷுட்டிங்கையும் தள்ளி வைத்துவிட்டு இதில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

‘விளம்பரங்களில் என் பெயருக்கு ஈக்குவலா விஜய் சேதுபதி பெயரும் வரணும். கவனக்குறைவா கூட விட்றாதீங்க’ என்று கூறியிருக்கிறாராம் ஹீரோ விஜய். ‘பேட்ட’ படத்தில் தனது கேரக்டர் டம்மியாக்கப் பட்டதை கண்டு ஃபீல் ஆகியிருந்த சேதுவுக்கு விஜய்யின் இத்த உத்தரவு நிஜமாகவே இன்ப அதிர்ச்சிதான்!

சக ஹீரோவுக்கு மதிப்பளிக்கிற ஹீரோவை பார்ப்பதே அரிது. விஜய் கிரேட்தான்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்