திரைச்செய்திகள்

நன்றாக வளர்ந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி, சற்றே தடுமாற ஆரம்பித்துவிட்டார் என்று நாக்கு மேல் பல் போட்டு பேச ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். பணம் பணம் பணம்... இது மட்டும்தான் அவரது ஒரே குறிக்கோளாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு.

ஷுட்டிங்குக்கு மட்டம் போடுகிறவரல்ல.... ஆனாலும் போட்டார். கை நீட்டுகிறவர்களுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்தால் வந்த வினை இது.

சங்கத்தமிழன் படப்பிடிப்புக்கு பல நாட்கள் மட்டம் போட்டதால் தயாரிப்பாளர் போட்ட கணக்கெல்லாம் தப்புக் கணக்கு ஆகிவிட்டது. கடைசியில் விஜய்சேதுபதியின் சம்பளத்திலேயே கை வைக்கிற அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை.

இது ஒரு புறம் இருக்க எட்டு கோடி வாங்கிக் கொண்டிருந்தவர் இப்போது தனது சம்பளத்தை பதினொரு கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். 96 படத்திற்குப் பின் ஒரு படமும் ஹிட்டாகாத நிலையில் இப்படியெல்லாம் அராஜகம் செய்தால் யார்தான் பாராட்டுவார்கள்?